உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம்

மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி: மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தத்தில் மேற்கு பார்த்த நிலையில் அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம் நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலையில் கும்பம் வைத்து ஜபம், கோயில் விமானம் , சுவாமி, அம்பாளுக்கு புனித நீரால் அபிஷேகம், 101 சங்கு அபிஷேகம், ருத்ர ஜபம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் டந்தது. இதில் பக்தர்கள், சிவனடியார்கள் உட்பட பலர் கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி அருணா சுடலைக்கண்ணு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !