சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1284 days ago
தேவகோட்டை: தேவகோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாகுதியை தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. மாலையில் சுந்தர விநாயகருக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. இரவு ஆன்மிகமலர் எழுத்தாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் விநாயகர் பெருமை பற்றி சொற்பொழிவாற்றினார். விழாவில் சுப்புராஜ், காசிநாதன், தங்கராசன், உட்பட கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.