அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருக்கல்யாணம்
ADDED :1191 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருக்கல்யாணம் நடந்தது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட, மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. ஜூலை 1ம், தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், மீனாட்சி, சொக்கநாதர் தினம் ஒரு வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று மாலை 7.30 மணிக்கு, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண முடிந்தவுடன், பெண்கள் அனைவருக்கும் தாலி சரடு வழங்கப்பட்டது. இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்