உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதோ அந்த பறவை போல...

அதோ அந்த பறவை போல...


பள்ளிக்கூடம் ஒன்றில் ‘அமைதி’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. பல மாணவர்கள் ஓவியங்களை வரைந்திருந்தனர். ஆற்றில் அமைதியாக செல்லும் படகு, வானில் பறக்கும் புறாக்கள் என ஆளாளுக்கு அருமையாக வரைந்திருந்தனர்.
‘இரைச்சலோடு விழும் அருவியின் மத்தியில் ஆரவாரமாக விளையாடும் சிறுவர்கள், கடமையே கண்ணாக துணி துவைத்துக்கொண்டிருக்கும் பெண்கள், மரப்பொந்தில் பறவை ஒன்று துாங்கிக்கொண்டிருந்தது’ இந்த படம் முதல் பரிசை பெற்றது.
கவனித்தீர்களா.. இதுதான் உண்மையான அமைதி. எந்த சத்தத்திலும் அதை கண்டுகொள்ளாமல், தன் வேலையை செய்கிறது அல்லவா பறவை. அந்த பறவையைப்போல வாழுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !