உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் இருக்கும் இடம்

கடவுள் இருக்கும் இடம்


தெரியப்படுத்துகிறார் சிவானந்தர்
–––––
* உண்மை இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார்.
* குழந்தையைப்போல் துாய மனதுடன் இருங்கள்.  
* உன்னை சீர்படுத்து. சமூகம் தானாகவே சீராகிவிடும்.
* ஒருநாளில் வருவதல்ல ஒழுக்கம். தினமும் அதை பின்பற்று.
* நல்லவனாக இரு. நல்லதையே செய்
* உண்மை, அன்பு ஆகிய இரண்டுமே உலகின் பெரிய சக்தி.  
* உலகம் ஒரு கண்ணாடி. நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும்.
* நாம் அதிகமாக நேசிக்கும் உருவத்திலேயே கடவுள் வெளிப்படுகிறார்.  
* உனக்கு வரும் ஒவ்வொரு நோயும் கர்மவினையின் விளைவேயாகும்.
* எந்தவொரு வேலையை எடுத்தாலும் அதை முழுமையாக செய்.
* மனச்சோர்வை விட மோசமான நோய் வேறு கிடையாது.
* உன் வாழ்க்கை நல்லதாக அமைய, பிறருக்கு நல்லது செய்.  
* உடல்நலம் சரியில்லை என்றால், உன்னால் சாதனை செய்ய இயலாது.
* இனிய பொய்யை விட, கசப்பான உண்மையே சிறந்தது.  
* பிறர் செய்யும் தவறை மறந்துவிடு. மனதில் அமைதி நிலவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !