உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வியின் நோக்கம் இதுவே

கல்வியின் நோக்கம் இதுவே


சொல்கிறார் ராமகிருஷ்ணர்

* கடவுளை அறிவதே கல்வியின் நோக்கம்.
* எது உண்மை, எது உண்மையற்றது என்ற ஆராய்ச்சி வேண்டாம்.    
* எல்லோரது வீட்டிலும் பகவத்கீதை புத்தகம் இருக்க வேண்டும். இது பல சாஸ்திரங்களை கொண்டது.
* கடவுளின் நாமம் விதை போன்றது. அதன் சக்தி மகத்தானது.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன.
* உனது எண்ணத்தை பொறுத்தே கடவுள் உனக்கு அருள்பாலிப்பார்.
* ஆசை உள்ளவனுக்கு ஞானம் வராது.
* நல்லவர்களுடன் பழகினால் மனம் துாய்மையாகும்.  
* கடவுளை அடைவதற்கான வழி பக்தியும், ஞானமும்.   
* ஞானிக்கு ஒளிமயமாகவும், பக்தனுக்கு அன்புமயமாகவும் கடவுள் காட்சி தருவார்.
* எதிலும் பற்று வைக்காமல் கடமையை செய்.
* வேண்டியவர், வேண்டாதவர் என கடவுளுக்கு யாரும் இல்லை.
* விடாமுயற்சி உள்ளவனுக்கு எல்லாம் சாத்தியம்.
* ஏழைக்கும் ஏழையாக இருக்க பழகு.
* தீமைக்குப் பதிலாக தீமை செய்யக்கூடாது.
* பொய் இருக்குமிடத்தில் தீமைகள் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !