சொன்ன சொல் மாறாதவன்
ADDED :1197 days ago
வெகு நாட்களுக்கு பிறகு நண்பர் ஒருவர் முல்லாவை சந்தித்தார்.
பேச்சின் இடையே முல்லாவிடம், ‘‘தங்களது வயது என்ன ” என கேட்டார். ‘நாற்பது’ என்றார்முல்லா. ஐந்து ஆண்டுக்கு முன்பு தங்களைச் சந்தித்த போது உங்களுடைய வயது நாற்பது எனச் சொன்னீர்கள். இப்போதும் அதையே கூறுகிறீர்களே! எப்படி? எனக்கேட்டார். ‘நான் சொன்ன சொல் மாறாதவன்’ ஒரு தடவை சொன்னதை மாற்றிச் சொல்லும் கீழான புத்தி எனக்குக் கிடையாது” என்று புன்னகைத்தார்.