இயற்கை நடத்தும் பாடம்
ADDED :1263 days ago
கடும்பசியுடன் அலைந்த புலிக்கு உணவு அகப்படவில்லை. துாரத்தில் இருந்து மான்கள் கூட்டமாக வந்தது. அதை பார்த்ததும் பதுங்கிய புலி அருகில் வந்த ஒரு மான் மீது பாய்ந்து கொன்றது. அந்த மானுடன் ஒரு குட்டி இருப்பதும் புலிக்கு தெரிந்தது. பசியால் வாடினாலும் தாயைக் கொன்று குட்டியை பிரித்த குற்ற உணர்ச்சி புலியை உறுத்தியது. ஆதரவற்ற குட்டியை வாயால் கவ்விக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு வந்தது புலி. குட்டி மான் வளரும் வரை பாதுகாத்தது. மனிதர்களிடம் இரக்கம், பரிவு, அன்பு குறைந்து கொண்டு செல்லும் இக்காலத்தில் விலங்கிடம் இருந்த பண்பை நாம் கற்றுக் கொள்வோம்.