திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரதோஷ பூஜை
ADDED :1552 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ஆனி மாத சோமாவார வளர்பிறை பிரதோஷம் நடந்தது. இதையொட்டி, கோவிலில் கொடிமரத்தின் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, ஆகியவற்றிற்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம்,தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூன்றாம் பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.