உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரி பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பந்தகால்

சிறுவாபுரி பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பந்தகால்

திருவள்ளூர்: சிறுவாபுரி பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பந்தகால் அமைக்கும் பணி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர், பென்னேரி வட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 19 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு யாகசாலை அமைக்க கால்கோல் நடும் விழா நேற்று நடந்தது. கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின், யாகசாலைக்கான கால்கோல் மற்றும் கோயில் கோபுரத்திக்கான கால்கோல் நடப்பட்டது. ஆகஸ்ட் 21ம் காலை 9 மணிமுதல் 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் கோயில் குருக்கள் மற்றும் கிராம பெரியோர்கள் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !