உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களரி காராருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

களரி காராருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரி கிராமத்தில் உள்ள பூரண, புஷ்கலா சமேத காராருடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 12 அன்று முதல் காலை யாகசாலை பூஜையுடன் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரக ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 6 மணி அளவில் சோம கும்ப பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பின்னர் காலை 10 மணி அளவில் கடம் புறப்பட்டு காராருடைய அய்யனார் கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பூமிநாதன், செயலாளர் முருகேசன், துணை செயலாளர் மணிமாறன், பொருளாளர் கதிரேசன், ராமலிங்கம், வி.கதிரேசன், பூஜகர் ராமையா, சிற்பி முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !