சீரடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா பவுர்ணமி பூஜை
ADDED :1152 days ago
பெரியகுளம்: சீரடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம் சீரடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா (குரு பௌர்ணமி) பூஜை கோலாகலமாக நடந்தது. காலை ஆரத்தியுடன் துவங்கிய பூஜை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கும்பஸ்தானம், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் மற்றும் சாயி அஷ்டோத்திர ஹோமம் நடந்தது. சாய்பாபாவுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பகல் ஆரத்தி, அன்னதானம் நடந்தது. மாலை ஆரத்தி, சாவடி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் ஏற்பாடுகளை எம்.எம். பி. டி., டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேனி மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.