திருமாஞ்சோலையில் முளைப்பாரி உற்சவ விழா
ADDED :1153 days ago
பூவந்தி: பூவந்தி அருகே திருமாஞ்சோலையில் மழை வேண்டி மந்தை பிடாரி அம்மனுக்கு முளைப்பாரி உற்சவ விழா நடந்தது. கொரானோ பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமப்புறங்களில் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து திருமாஞ்சோலை மந்தை பிடாரி அம்மன் கோயிலில் கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி உற்சவ விழா தொடங்கியது. 8ம் நாள் விழாவாக முளைப்பாரிகளை பெண்கள் சுமந்து கிராமத்தை வலம் வந்து ஊரணியில் கரைத்து அம்மன் வழிபட்டனர்.