வெம்பூர் கோயில் விழாவில் கழுகு மரம் ஏறல்
ADDED :1175 days ago
வேடசந்தூர்: வெம்பூர் கிராமம் கோவிலூரில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கரகம் பாலித்தில், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் காளை ஆட்டம், மயிலாட்டம், வான வேடிக்கை, கழுகு மரம் ஏறுதல், படுகளம் நிகழ்ச்சிகளுடன் மாலை மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நடைபெற்றது. திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.