திருவாடி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1315 days ago
பரமக்குடி: அருகே உள்ள திருவாடி கிராமத்தில் அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் சிவகாமி மற்றும் கருங்காலி அம்மன் அருள் பாலிக்கின்றனர். மேலும் கோயில் வளாகத்தில் நெம்மேனி அய்யனார், கருப்பணசாமி, சோனை கருப்பசாமி, முனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராம கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.