48 அடி உயர பாதாள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1179 days ago
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த வாணாபுரத்தில் 48 அடி உயரமுள்ள பாதாள காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழா, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து புது கருவறை சுவாமி சிலைகள் கரிக்கோலம் நடந்தது. வாஸ்து பூஜை, பிரவேசபலி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று காலை 8:30 மணிக்கு நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிறகு, 48 அடி உயரம் கொண்ட பாதாள காளியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பரிகார தேவைகளுக்கும் கும்பாபிேஷகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.