பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :1183 days ago
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா நடந்து வருகிறது. 2ம் நாள் திருவிழாவில் அம்மனை தென்கரை தெற்குபுதுத்தெரு விஸ்வகுல மகாஜன சங்கத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டது. இரவில் மின்ஒளி அலங்காரத்தில் அம்மன் மலர் அலங்காரத்தில் வீதி உலா சென்றார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விஸ்வகுல மகாஜன சங்கத்தார்கள் செய்திருந்தனர்.