உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திசையன்விளை முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திசையன்விளை முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திசையன்விளை: திசையன்விளை மணலிவிளை முத்தாரம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. திசையன்விளை, மணலிவிளை, முத்தாரம்மன் கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகவிழா 4 நாட்கள் நடந்தது. விழாவில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை , சுதர்சன ஹோமம், தனலட்சுமி ஹோமம்,  தீபாராதனை, புனித நீர் கும்பங்களில் சேகரிக்கப்பட்டு கோயிலை வலம் வந்து சேர்த்தல், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, சிவ சூரிய பூஜை , தோரண பூஜை, வேதிகா பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, பிரசன்ன மகாலட்சுமி பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், நான்காம் கால யாகசாலை பூஜை, கும்பம் எழுந்தருளுதல், விமான கும்பாபிஷேகம், பிரதான மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 21 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், ஜோடஷ தீபாராதனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !