அமர்நாத் யாத்திரை தடை நீக்கம்: 6400 பேர் பாதுகாப்புடன் பயணம்
ஜம்மு - காஷ்மீரின் ஜம்மு முகாமில் இருந்து அமர்நாத் குகை கோவிலுக்கு 6400 யாத்ரீகர்கள் நேற்று புறப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்திலிருக்கும் இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.இந்த ஆண்டு கடந்த மாதம் 30ம் தேதி துவங்கிய அமர்நாத் யாத்திரைக்கு கடந்த வாரம் நிலவிய மோசமான வானிலை காரணமாக தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 16 பேர் உயிரிழந்தனர். இன்னும் 40 பேரை காணவில்லை. இந்நிலையில் வானிலை சீரடைந்ததால் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த 6,415 பேர் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் 258 வாகனங்களில் நேற்று அமர்நாத் குகை கோவிலுக்கு புறப்பட்டனர். அமர்நாத் யாத்திரை ஆக., 11ல் நிறைவடைகிறது.