உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடித் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைப்பு

ஆடித் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைப்பு

பழநி: பெரியகலையம்புத்தூரில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்துதல் வழக்கமாகும். நேற்று காலை 9.30 மணிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டின்போது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பூசாரி சாட்டையால் பக்தர்களை அடித்து, அருளாசி வழங்கினார். பழநி வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !