முனியாண்டி கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :1290 days ago
திருப்பரங்குன்றம் : மதுரை கோபாலிபுரம் பொதுமக்கள் சார்பில் காளியம்மன், கருப்பசாமி, முனியாண்டி கோயில் 58 வது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா நடந்தது. பசுமலை விபூதி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், தீர்த்த குடம் எடுத்து காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். மூலவருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரமானது. பெண்கள் சக்தி கரகம், முளைப்பாரி எடுத்துச் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.