சுடுகாட்டு காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :1291 days ago
மேலூர்: கீழவளவு சுடுகாட்டு காளியம்மன் கோயிலில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி ஆனி மாத திருவிழா கொண்டாடப்பட்டது இத் திருவிழாவில் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் கீழவளவில் இருந்து பால்குடம் எடுத்து அரை கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்றனர் அங்கு சிறப்பு அபி சேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்