நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
                              ADDED :1202 days ago 
                            
                          
                          வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. காலை சிறப்பு பூஜைகள், இரு வீட்டார் அழைப்பை தொடர்ந்து 11:20 மணிக்கு பட்டர் பாலாஜி திருமண யாகசாலை பூஜை நடத்த பாகவதர்கள் ரவி ஆண்டாளாகவும், சாரங்கன் ரங்கநாதானக வேடமிட்டு மாலை மாற்றிக் கொண்டனர். முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் நவநீதகண்ணன், பாகவதோத்மார்கள் செய்திருந்தனர்.