உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை

திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை(12ம் தேதி) திருவிளக்கு பூஜையும், மாதர் மாநாடும் நடக்கிறது.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் சார்பில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் விளக்கு பூஜையும், மாதர் மாநாடும் நடக்கிறது. குமரி மாவட்டத்தின் முக்கியமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் சிறந்து விளங்கும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் விவேகானந்த கேந்திரம் சார்பில் விளக்கு பூஜை நடந்து வருகிறது.இந்த ஆண்டைய சிறப்பு வரும் 12ம் தேதி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் விளக்கு பூஜைகளை நடத்திவரும் கிராமத்து பெண்களை ஒன்றிணைத்து விளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திரம் சார்பில் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !