உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுத்ததெல்லாம் கொடுத்தேன்!

கொடுத்ததெல்லாம் கொடுத்தேன்!


பல போர்களில் வெற்றி பெற்றது ஒரு நாட்டின் படை. அதற்கு காரணம் அந்தப்படையின் தளபதி. இருந்தாலும் அவர் ஏதோவொரு காரணத்தினால் படையில் இருந்து விலகுவதாக மன்னரிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட மன்னர்,  
‘‘என்ன விளையாடுகிறீர்களா... என் முன்னோர்கள் கொடுத்த செல்வத்தை உங்களுக்குத்தானே கொடுத்திருப்பேன். அடுத்த வருடம் நாட்டின் சில பகுதிகளையும் கொடுக்கலாம் என நினைத்திருந்தேனே. அந்த நம்பிக்கையை உடைத்து விட்டீர்களே.. இது நியாயமா’’ என கேள்விகளை அடுக்கினார்.  
தன் தவறை உணர்ந்த தளபதி, ‘‘மன்னா.. இதுவரை எனக்கு எத்தனையோ கொடுத்துள்ளீர்கள். கடைசியாக மன்னிப்பை கேட்கிறேன். அதை கொடுப்பீர்களா’’ என தயங்கினார் தளபதி.
மன்னரின் முகத்தில் சிரிப்பு ஊற்றெடுத்தது. அன்று முதல் தளபதி நாட்டை மிகவும் நேசிக்க ஆரம்பித்தார்.
கவனித்தீர்களா... இதுபோல் நீங்களும் தவறு செய்பவர்களை மன்னித்து பாருங்கள். இது அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !