உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஆடி மாத பூஜை : அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் ஆடி மாத பூஜை : அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சபரிமலை, சபரிமலையில் ஆடி மாத பூஜை நேற்று அதிகாலை தொடங்கியது. தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறந்தது. அன்று வேறு பூஜைகள் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வழக்கமான கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிேஷகம், அத்தாழ பூஜையுடன் சிறப்பு பூஜைகளாக உதயாஸ்தமனபூஜை, படிபூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை நடை திறந்த போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சன்னிதானத்தை சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் நெருங்கியடித்து நின்று தரிசனம் நடத்தினர். வரும் 21–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !