உலகத்தை சொந்தமாக்குவோம்
சொல்கிறார் சாரதா தேவியார்
* அன்பின் மூலம் உலகத்தை சொந்தமாக்குங்கள்.
* தினமும் தியானம் செய். மனதில் நல்ல எண்ணம் உருவாகும்.
* கடவுள் நாமத்தை சொல். மனம் துாய்மை பெறும்.
* எதிர்பாராத நேரத்தில் கூட ஒருவருக்கு கடவுளின் அருள் கிடைக்கலாம்.
* ஒருவரின் கர்மபலன் முடிந்த உடனேயே கடவுளின் காட்சி கிடைக்கும்.
* நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் ஏற்படுகிறது.
* கங்கை கரையில் வசிப்பவர்கள் தேவர்கள். ஏனெனில் அவர்கள் தினமும் கங்கையில் நீராடுகிறார்கள்.
* அங்கும் இங்கும் ஓடுவதுதான் மனதின் இயல்பு. அதைக் கட்டுப்படுத்து.
* நீ எதை மதிக்கிறாயோ, அதுதான் உன்னையும் மதிக்கும்.
* பெண்களின் சிறந்த ஆபரணம் நாணப்பண்பாகும்.
* மனதில் கருணை கொண்டவனே உண்மையான மனிதன்.
* ஒருவருக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது. எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நல்லதை செய்.
* மரணத்தை கண்டு மனிதன் அழுகிறான். மகானோ சிரிக்கிறார்.
* நீ செய்த நல்ல, தீய செயல்கள் மரணத்திற்கு பிறகும் உன்னை தொடரும்.
* கடவுளிடம் சரணடைந்தால் பாவம் தீரும்.