உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் 1008 கலசாபிஷேகம்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் 1008 கலசாபிஷேகம்

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று உலக நன்மை வேண்டி 1008 கலசங்களுடன், நான்கு லட்ச ஜப ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் பூர்த்தியாகி கற்பக விநாயகருக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

சிவப்பரம்பொருள் வழங்கிய வேதசிவாகமத்தின் நான்கு லட்ச மந்திர ஜபம் இறைவனை மகிழ்விக்கும். மக்களுக்கு துன்பம், இன்னல், வறட்சி, நோய் நேரும் காலங்களில் இறைவனை ஜபம் மூலம் பிரார்த்திப்பதால் இன்னல் நீங்கி உலக உயிர்கள் நலம் பெறும் என்பது ஐதீகம். இதனையொட்டி கற்பக விநாயகர் கோயிலில் உலக உயிர்களின் நலன் வேண்டி சதுர் லட்ச ஜெபம், 1008 கலசாபிஷேகம் இன்று நடக்கிறது. ஜூலை 13ல் ஹோமங்கள்துவங்கி, ஜூலை 16 ல் 1008 கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாக சாலையில் 4 லட்ச ஜபங்களுடன் ஹோமம்,ஐந்து கால யாக சாலை பூஜைகள் நேற்று வரை நடந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு வேதபாடசாலைகளிலிருந்து சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர். இன்று காலை 8:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் துவங்குகின்றன. காலை 11:00 மணிக்கு சதுர்லட்ச ஜெபதாம்ச ஹோமம் பூர்த்தியாகி பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி கோயில் மூலவர் சன்னதி சேர்க்கப்படும். காலை 12:00 மணிக்கு மூலவருக்கு கலசாபிஷேகம் நடந்து, தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !