உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கோயிலில் 1008 கலசாபிஷேகம் துவங்கியது

பிள்ளையார்பட்டி கோயிலில் 1008 கலசாபிஷேகம் துவங்கியது

சிவகங்கை:  பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் உலக உயிர்கள் நலம் வேண்டி 1008 கலசாபிஷேக ஹோமம், யாக சாலை பூஜைகள் ஜூலை 13 ல் துவங்கியது. ஜூலை 16ல் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு யாக பூஜைகள் துவங்கியது. இன்று காலை 9.00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜைகள் நடந்து காலை 11.45 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 12:20 மணிக்கு யாக சாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் கோயிலுக்கு புறப்பாடானது. பின்னர் காலை 12.40. மணிக்கு மூலவர் கற்பக விநாயகருக்கு கலசாபிஷேகம் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !