உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி - திருப்பதி பாதயாத்திரை பக்தர்கள் உற்சாகம்

பரமக்குடி - திருப்பதி பாதயாத்திரை பக்தர்கள் உற்சாகம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பதி சென்றனர்.

எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேஷய்யன், 70. இவரது தலைமையில் வருடா வருடம் திருப்பதிக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து யாத்திரியை துவக்கினார். 25 பேர் கொண்ட இக்குழுவினர் தொடர்ந்து 22 நாள் நடை பயணத்திற்கு பிறகு திருப்பதியில் தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யாத்திரை தடைப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மீண்டும் புது உற்சாகத்துடன் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !