உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்

திருவள்ளூர் : திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை, தெப்பத்திருவிழா இன்று துவங்குகிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா இன்று (21ந்தேதி) துவங்கி வரும் 25ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

விழாவானது இன்று காலை அஸ்வினியுடன் தொடங்குகிறது. நாளை (22ம் தேதி) ஆடி பரணி, 23ம் தேதி ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு முதல்நாள் தெப்ப விழா நடத்தப்படுகிறது. 24ம் தேதி 2ம் நாள் தெப்பமும் 25ம் தேதி 3ம் நாள் தெப்பமும் நடக்கிறது. ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் , சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்துக்காக ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும். அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்பார்வையில் திருத்தணி கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !