உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பசியார் பாலமுருகன் கோவிலில் ஆடித் திருவிழா

தென்பசியார் பாலமுருகன் கோவிலில் ஆடித் திருவிழா

மயிலம்: தென்பசியார் கிராமத்தில் ஆடித் திருவிழா கொண்டாடப் பட்டது. மயிலம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் பாலமுருகன் கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி கடந்த ஜூலை 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று வள்ளி தெய்வானை பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை தென்றல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !