விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு
ADDED :1374 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.