மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியில் அலைமோதிய பெண்கள்
ADDED :1177 days ago
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இரு ஆண்டு இடைவெளிக்கு பின் ஆடி வெள்ளிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க குவிந்தனர். நண்பகல் ஒருமணிக்கு உச்சி கால பூஜையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்ட பின் அய்யனாருக்கு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு பகல் ஒரு மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பலரும் பட்டு சேலை, தாமரை பூ மாலை, எலுமிச்சை மாலை சார்த்தி வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகம் முழுவதும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்கள் மடப்புரம் விலக்கு அருகில் நிறுத்தப்பட்டன.