உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிபூரம் பிரமோற்சவ கொடியேற்றத்துடன் துவங்கியது

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிபூரம் பிரமோற்சவ கொடியேற்றத்துடன் துவங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிபூரம் பிரமோற்சவ  விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துவங்கிய ஆடிபூரம் பிரமோற்சவ  விழாவை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சன்னதி முன் உள்ள  தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளம் முழங்க, காலை 6.30 மணிக்கு   கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் அருகே பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பழனி ஆண்டவர் சன்னதியிலிருந்து  ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதி உலா வந்து  வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !