உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு அவ்வை கோட்டத்தில் மண்டலபிஷேகம்

திருவையாறு அவ்வை கோட்டத்தில் மண்டலபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வடக்கு வீதியில் எழுந்தருளியுள்ள அவ்வையாருக்கு  மண்டலபிஷேகம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வடக்கு வீதியுள்ள அவ்வை கோட்ட வளாகத்தில் அவ்வையாருக்கு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 3ம் தேதி, புஷ்ப மண்டப படித்துறை, காவிரி ஆற்றில் இருந்து யானையின் மூலம் புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, 5ம் தேதி கோவை காமாட்சிபுரி ஆதீனம் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிறைவாக  மண்டல அபிஷேகம் நடந்தது. இதில், 108 சங்குகளில் புனித நீர் வைக்கப்பட்டு அவ்வையார் மூலவருக்கு மஞ்சள் தேன் தயிர், பாலு சந்தனம் இளநீர் போன்ற திரவிய பொடிகள் கொண்டு அபிஷேகம் நடந்தது. காமாட்சிபுரி ஆதீனத்தினை சேர்ந்த சைவ திருமுறை வாணர்கள் கலந்து கொண்டு யாகசாலை வேல்வினை  சிறப்பாக செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அவ்வை கோட்ட நிறுவனர் கண்ணகி கலைவேந்தன்  செய்திருந்தார். மகப்பேறு வேண்டி மகளிருக்கான சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அவ்வையாரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !