ஆடி முதல் சனிக்கிழமை கோயில்களில் வழிபாடு
ADDED :1172 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆடி முதல் சனிக்கிழமை மற்றும் திருப்பவித்திர உற்சவம் வழிபாடு நடந்தது. அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டும் என ஹோமம் பூஜைகள் நடந்தது, திருபவித்திர உற்சவத்தின் சிறப்பாகும். உற்சவர் பெருந்தேவி தாயார், வரதராஜப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
* பெரியகுளம் பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. வெள்ளிகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். * லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆடி முதல் சனிக்கிழமை லட்சுமி நாராயணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.