உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு 6.30மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று காலை வைத்தியநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள அசனாம்பிகை அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில், காலை 9:00 மணியளவில் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் ஆகஸ்ட்.1ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !