உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன ஸ்ரீ விக்ஞான மலை மீது வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை பிரம்மோற்சவம் கடந்த 18 ஆம் தொடங்கி  தொடங்கி 23ம் தேதி அன்று ஆடிக்கிருத்திகை விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது .


இந்நிலையில் நேற்று 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் அருகில் உள்ள நாரதர் ( புஷ்கரணி )குளத்தில் தெப்போற்சவம்  நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிவன் கோயில் அதிகாரிகள் செய்யப்பட்டிருந்தனர் .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில்  வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவ மூர்த்திகளை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சப்பரத்தில் நான்கு மாத வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 25ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அம்மையார்களின் திரு கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும் என்று சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !