திருவரங்க மாளிகையார்
ADDED :1183 days ago
உற்சவர் அழகிய மணவாளன் வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்த காலத்தில், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல், உள்ளூரில் இருந்தவர்கள் அவரது இடத்தில் புதிதாக ஒரு விக்கிரகத்தை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் அழகிய மணவாளன் ஸ்ரீரங்கம் திரும்பி வந்து அவர்தான் அசல் பெருமாள் என்பது உறுதியானதும், அதுவரை அவரது பீடத்தில் இருந்தவரை, நம்பெருமாளுக்கு அருகிலேயே வைத்தனர். இவருக்கு திருவரங்க மாளிகையார் என்று பெயர், அதாவது ‘வீட்டைச் சேர்ந்தவர்’ என்ற பொருள். இந்த பெருமாள் யாகசாலை நாட்களில் அங்கு எழுந்தருள்வதால் இவருக்கு யாகபேரர் என்ற பெயரும் உண்டு.