திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு அறங்காவலர்கள் பொறுப்பேற்பு
ADDED :1166 days ago
திருவள்ளூர் : ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசால் திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு ஐந்து அறங்காவலர்கள் முறையே திரு.என்.கே.மூர்த்தி திரு.பி.ஏ.சந்திரசேகரசெட்டி, திரு.பா.கோவிந்தசாமி, திருமதி.க.வளர்மதி மற்றும் திரு.பா.சாந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அறங்காவலர்கள் நேற்று (24/07/2022) பதவி ஏற்றுக்கொண்டனர். அறங்காவலர் குழுத்தலைவர் தேர்தல் திருக்கோயிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் திருமதி.கோ.ஜெயப்பிரியா முன்னிலையில், தேர்தல் அதிகாரி திருமதி.கா.சித்ராதேவி, உதவிஆணையர், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்டம் அவர்களால் நடத்தப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவராக திரு.என்.கே.மூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.