உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியப்ப சுவாமி கோவிலில் குதிரை, பசு கண்திறப்பு விழா

முனியப்ப சுவாமி கோவிலில் குதிரை, பசு கண்திறப்பு விழா

குமாரபாளையம், சேலம் சாலை சரவணா தியேட்டர் எதிரில் உள்ள முனியப்பன், கருப்பண்ண சுவாமி கோவிலில், குதிரை, பசு கண் திறப்பு விழா நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடத்தப்பட்டு, குதிரை, பசு கண் திறப்பு நிகழ்வு நடந்தது. யாகசாலை பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார், சத்யோஜாத வேத சங்கர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர்கள் நடத்தினர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !