உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றியில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சார்பில் மனமகிழ் மன்றம் துவக்க விழா

குன்றியில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சார்பில் மனமகிழ் மன்றம் துவக்க விழா

கோவை : குன்றி மலையில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சார்பில் மனமகிழ் மன்றம் துவக்க விழா இன்று நிலாப்பள்ளியில் நடந்தது. கோவை மாவட்டம் அன்னுார் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் நிறுவனர் குருஜிஷிவாத்மா தலைமை தாங்கி மனமகிழ் மன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்புரையாற்றினார்.சேவாஸ்ரமம் சார்பில் தமிழகம் முழுவதும் 23 இடங்களில் ஆதரவற்ற முதியோர்,குழந்தைகள் காப்பகங்கள் நடத்தபடுகிறது.24ஆவதாக குன்றி மலையில் சேவை மையம்,துவங்கப்படும். பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் ஏற்பாடுகள் செய்யப்படும்.தினந்தோறும் மதியம் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக குருஜிஷிவாத்மாவிற்கு பூரண கும்ப மரியாதை செய்து பழங்குடி மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து நடனமாடி வரவேற்றனர்.மதியம் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கபப்ட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிலாப்பள்ளி ஆசிரியர் சதீஷ்,மற்றும் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரம பணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் குன்றி,அணில்நத்தம்,கிளைமன்ஸ்தொட்டி,மாகாளிதொட்டி,பெரியகுன்றி,ஆகிய பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !