உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்

நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் சந்நிதியில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வேறு வாகனங்களில் உள்பிரகார வீதியுலா நடக்கிறது. 4ம் திருநாளான நேற்று 12:௦௦ மணிக்கு அம்பாள் சந்நிதி, ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்நடந்தது. பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு வளையல் காணிக்கை வழங்கி வழிபட்டனர். நெல்லை குதி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் அப்துல்வகாப்பின் மகன் முஸ்ஸமில், கவுன்சிலர்கள் உலகநாதன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கோகிலவாணி, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், மூளிக்குளம் பிரபு, கம்பர்குல உவச்சர் சமுதாயக்குழுவினர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் நலன் வேண்டி தி.மு.க., வினர் வழிபாடு நடத்தினர். பெண்களுக்கு குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் பிரசாதம், மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்பாள் வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான ள் பங்கேற்றனர்.

ஆடிப்பூரம் 10ம் திருநாளை முன்னிட்டு 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு 7.30 மணிக்குள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவம் நடக்கிறது. நவதானியங்கள், பலகாரங்கள் கொண்டு அம்பாள் மடியை நிரப்பி சிறப்பு பூஜை செய்யப்படுகிறது . ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !