சதாசிவ லிங்கேஸ்வரருக்கு சோமவார சிறப்பு பூஜை
ADDED :1184 days ago
உடுமலை: அமராவதி நகர் சித்தி விநாயகர் கோவிலில் சோமவார சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை அருகே அமராவதி நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று சோமவார சிறப்பு பூஜை நடந்தது.இதில், சிறப்பு அலங்காரத்தில், சதாசிவ லிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், அமராவதிநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.