வேலையை ரசித்து செய்
என்கிறார் ஸ்ரீஅன்னை
* வேலையை சுமையாக கருதாதே. அதை ரசித்து செய். உனக்கு பயன் தரும்.
* நீ விரும்பியதை கடவுள் தரமாட்டார். உன் தகுதிப்படியே அவர் அருள்புரிவார்.
* மனம் ஒரு கண்ணாடி. அதை நல்ல எண்ணத்தால் தினமும் சுத்தம் செய்.
* இப்பிறவியில் நீ சந்திப்பவர்களை, முற்பிறவியிலும் சந்தித்து இருப்பாய்.
* கடவுளின் பார்வை உன் மீது விழுமானால், அவர் உன்னை நேர்மையாக இருக்கச் செய்யும் சூழலை உருவாக்குவார்.
* நேற்றைய மனதின் சுமைகளை இன்று சுமக்காதே.
* மலரின் தோற்றத்தை எல்லோரும் பார்க்கலாம். அதுபோல் உன் மனதையும் வைத்திரு.
* பிறரது விஷயத்தில் தலையிடாதே. அதுதான் உனக்கு நல்லது.
* நேர்மையும், தன்னம்பிக்கையும் உன்னிடம் இருந்தால் வெற்றி உறுதி.
* பாடத்தை சொல்லிக்கொடுப்பது மட்டும் ஆசிரியரின் வேலை அல்ல. நல்ல வழியையும் அவர்தான் காட்டுவார்.
* நீ கற்கவேண்டியது நிறைய உள்ளது. தினமும் ஏதாவது ஒன்றை அறிந்து கொள்.
* பொறுமையாகவும், அமைதியாகவும் இரு. நினைத்ததை அடையலாம்.
* பயந்தவன் தெய்வத்திடம் கடுமையைக் காண்கிறான்.
* நம்பிக்கையுள்ளவன் தெய்வத்தை நண்பனாக பார்க்கின்றான்.