வயதானவர்களுக்கு உதவுங்கள்
ADDED :1182 days ago
கபீர் அவசரமாக பணிக்கு செல்ல பஸ் ஸாண்டில் நின்று கொண்டிருந்தார். அங்கு வயதான பாட்டியின் குரல் கேட்டது. சாமி! எனக்கு கண் தெரியாது. இங்கு பக்கத்தில் முதியோரை பராமரிக்கும் இடம் இருக்குதாமே. அங்கு கொண்டு என்னை விட்டு விடுங்கள் என புலம்புவது அவர் காதில் ஒலித்தது. பாட்டிக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கும் போது பணியிடத்திலிருந்து அவசரமாக வரச்சொல்லி அழைப்பு வந்தது. மறுக்க முடியாமல் வந்த பஸ்லில் ஏறிச்சென்றார் கபீர். இரவு 10:00 மணிக்கு பணி முடிந்து அவ்வழியாக வந்த போதும் அப்பாட்டியின் குரல் கம்மியாக ஒலித்துக்கொண்டே இருந்தது. இவ்வளவு மக்கள் வந்து போகும் பஸ் ஸாண்டில் இந்த வயதான பாட்டிக்கு உதவி செய்ய ஒரு ஆள் கூட இல்லையா என நினைத்தார்.
அருகில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு அழைத்துச்செல்ல பாட்டியுடன் ஆட்டோவில் ஏறினார் கபீர்.