வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா ரத்து
ADDED :1240 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருப்பணி நடப்பதால் இந்தாண்டு ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாள் திருவிழா நடக்கும். இந்தாண்டிற்கான திருவிழா ஆக.3ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஆக.11ல் தேரோட்டம் நடக்க வேண்டும். ஆனால் தற்போது கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடப்பதால் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் பிரச்னையால் பக்தர்களின்றி ஊழியர்கள் மட்டும் பங்கேற்று கோயில் வளாகத்திற்குள் ஆடித்திருவிழா நடந்தது. அதே நேரம் இரு ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.