மாரி, செல்லியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா விமரிசை
சூணாம்பேடு : செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, மூன்று நாட்கள் விமரிசையாக நடந்தது.
சூணாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தில், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் ஆடி திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும்.கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, இரு ஆண்டுகளாக பெரியளவில் நடக்கவில்லை. இந்தாண்டு விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, இம்மாதம் 24ம் தேதி, கொடியேற்றத்துடன் ஆடி திருவிழா துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, நேற்று மதியம் 2:45 மணிக்கு மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. மாலை, செல்லியம்மன் கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து, பெண்கள் அம்மனுக்கு படையலிட்டனர்.இரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் வீதியுலா நடந்தது. வில்லிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.