திருப்பரங்குன்றம் கோயிலில் ஆடி அமாவாசை : அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம்
ADDED :1488 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணபொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை முடிந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அலங்காரமானது. திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.